» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தாமிரபரணி புஷ்கரத்தில் குளிக்க குவிந்த பொதுமக்கள்

சனி 20, அக்டோபர் 2018 5:28:54 PM (IST)

விடுமுறை தினம் என்பதால் தாமிரபரணி புஷ்கர விழாவில் அதிகளவு பக்தர்கள் நீராடினார்கள் 

விருச்சிக ராசிக்குரிய நதியான தாமிரபரணியில் புஷ்கர விழா  கடந்த 11-ந்தேதி தொடங்கியது. தாமிரபரணியில் உள்ள 64 தீர்த்தக் கட்டங்கள், 149 படித்து றைகளில் பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள்.தாமிரபரணி நதிக்கு தினசரி மாலையில்  மகா ஆரத்தி நடந்து வருகிறது. இதனால் ஆரத்தியை காண பக்தர்கள் அதிகளவில் திரண்டு வருகிறார்கள்.  

புஷ்கர விழாவில் வடமாநில பக்தர்களை காண முடிகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் முறப்பநாடு மற்றும் பாபநாசத்தில் அதகளவில் பொதுமக்கள் புனித நீராடினார்கள். நாளை ஞாயிற்றுகிழமை என்பதால் இன்னும் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory