» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

விவசாயியை பைக் ஏற்றி கொல்ல முயன்றவர் கைது

சனி 20, அக்டோபர் 2018 6:27:20 PM (IST)

தன்னூத்தில் விவசாயியை பைக் ஏற்றி கொல்ல முயன்ற டிராவல்ஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் சேர்ந்தமரம் தன்னூத்தை சேர்ந்தவர் சமுத்திரபாண்டி(38) விவசாயி. இவருக்கும் கடையாலுருட்டியை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் பொன்னுச்சாமி (55) என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சமுத்திரபாண்டி நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவரை மோட்டார்பைக் ஏற்றி பொன்னுச்சாமி காெல்ல முயன்றதாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து சமுத்திரபாண்டி அளித்த புகாரின் பேரில் சேர்ந்த மரம் போலீசார் பொன்னுச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory