» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கணவருக்கு கொலைமிரட்டல், மனைவி போலீசில் புகார்

சனி 20, அக்டோபர் 2018 6:53:30 PM (IST)

திசையன்விளையில் கணவருக்கு கொலைமிரட்டல் விடுத்தவர் மீது அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார்.

திசையன்விளை அரிகிருஷ்ணநாடார் தெருவைசேர்ந்தவர் சுந்தர். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டு அது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதாம். சம்பவத்தன்று சுந்தர் வீட்டிற்கு சென்ற மோகன்ராஜ் அவரை அரிவாளால் வெட்ட முயன்றாராம். இச்சம்பவம் குறித்து அவரது மனைவி சாந்தா திசையன்விளை போலீசில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் மோகன்ராஜ் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory