» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

வியாழன் 8, நவம்பர் 2018 10:39:02 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 15 வட்டங்களில் நாளை (நவ.9) அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 15 வட்டங்களிலும் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.திருநெல்வேலி வட்டம் கட்டளை உதயநேரி, திருத்து, அழகனேரி, ராதாபுரம் வட்டம் சமூகரெங்கபுரம், அம்பாசமுத்திரம் வட்டம் வாகைகுளம், நான்குநேரி வட்டம் நான்குநேரி, மேலபுத்தனேரி, இளையர்குளம், தெய்வநாயகப்பேரி, சிங்கனேரி, காரங்காடு, சேரன்மகாதேவி வட்டம் தெற்கு வீரவநல்லூர், மானூர் வட்டம் எட்டான்குளம், சங்கரன்கோவில் வட்டம் ஈச்சந்தா, திருவேங்கடம் வட்டம் மதுராபுரி, அ.மதுராபுரி, தென்காசி வட்டம் மின்னடிசேரி, ஆயிரப்பேரி, செங்கோட்டை வட்டம் கணக்குபிள்ளைவலசை, வீரகேரளம்புதூர் பலபத்திரராமபுரம், ஆலங்குளம் வட்டம் துப்பாக்குடி, ராவுத்தபேரி, சிவகிரி வட்டம் நாராணபுரம், கடையநல்லூர் வட்டம் தலைவன்கோட்டை, திசையன்விளை வட்டம் குட்டம் ஆகிய இடங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது.

இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை மற்றும் நிறுத்தம் செய்யப்பட்ட முதியோர் உதவித்தொகை மறுபரிசீலனை விண்ணப்பம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, சாலை வசதி, குடிநீர் வசதி தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory