» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நாள் முழுவதும் இருந்து கால்வாயை சீரமைத்த மாவட்ட வருவாய் அலுவலர் : பொதுமக்கள் பாராட்டு

வியாழன் 8, நவம்பர் 2018 10:57:56 AM (IST)தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் ஒருநாள் முழுவதும் இருந்து கால்வாய் சீரமைப்பு பணிகளை மேற்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலரை பொதுமக்கள் பாராட்டினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோரம்பள்ளம் 8ம் நம்பர் மடையில் விவசாயத்திற்காக தண்ணீர் வடிநீர் கால்வாய் சரியான பராமரிப்பின்றி நீண்டநாள் இருந்ததால் அருகிலுள்ள பொன்னகரம் ஊருக்குள் தண்ணீர் சென்றுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து ஊர் மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தனர். மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று பராமரிப்பின்றி கிடந்த கால்வாயை சீரமைக்கும் பணிகளை முடுக்கி விட்டுள்ளார். 

இதனால் ஒரே நாளில் பாதிப்புகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் ஒரு நாள் முழுவதும் அங்கேயே இருந்து பாதிப்புகளை சரி செய்து முடித்து விட்டு சென்றுள்ளார். தங்கள் கோரிக்கையை விரைவாக நிறைவேற்றிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கும், வருவாய் அலுவலருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பொதுப் பணித்துறையினர் சரியான நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட வருவாய் அலுவலரே நேரடியாக இப்பணிகளில் தீவிர கவனம் செலுத்தி ஒருநாள் முழுவதும் இருந்து பணிகளை முடித்துள்ளதாக நன்றியும், பாராட்டுக்களும் தெரிவித்தனர். 


மக்கள் கருத்து

கணேஷ்Nov 9, 2018 - 04:55:29 PM | Posted IP 141.1*****

Thanks for your service

KaramNov 9, 2018 - 01:58:01 PM | Posted IP 141.1*****

It is heartening to hear such news. When there is good officers are there to do job for country the people should also take some responsiblity in selecting good representatives

தமிழன்Nov 9, 2018 - 11:15:00 AM | Posted IP 172.6*****

சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் சார்....

M.sundaramNov 9, 2018 - 10:29:05 AM | Posted IP 162.1*****

It is seen that Dist administration is taking expeditious action for tank repair activities. In this case please refer The Hindu English daily paper dated 02 Jul 2016 .

VinothanNov 8, 2018 - 01:30:26 PM | Posted IP 172.6*****

Congratulations Sir! Keep it UP!!

அந்தோணி சாமி தூத்துக்குடிNov 8, 2018 - 01:14:15 PM | Posted IP 172.6*****

வாழ்த்துக்கள்

அக்ரி பரமசிவன்Nov 8, 2018 - 11:19:32 AM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள்....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory