» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பிஎஸ்என்எல் நிறுவன தள்ளுபடி திட்டம் நீட்டிக்கப்பட்டது

வியாழன் 8, நவம்பர் 2018 11:27:19 AM (IST)

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கான தனலட்சுமி தள்ளுபடி திட்டம் இம்மாதம் 23ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிஎஸ்என்எல் திருநெல்வேலி தொலைத் தொடர்பு மாவட்டப் பொதுமேலாளர்  முருகானந்தம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தனலட்சுமி தள்ளுபடி திட்டத்தை வழங்கி வருகிறது. அந்த திட்டம் இம்மாதம் 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, புதன்கிழமை முதல் 23ஆம் தேதி வரை தங்களது தொலைபேசி, பிராட்பேண்ட், செல்போன் பில்களை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் செலுத்தும் தொகையில் ஒரு சதவீதம் தள்ளுபடியாகக் கணக்கிட்டு அடுத்து வரும் பில்லில் ஈடுசெய்யப்படும். பிஎஸ்என்எல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு 2 சதவீதம் மற்றும் முன்கூட்டியே பணம் செலுத்துவோருக்கு 3 சதவீதம் ஆகிய தள்ளுபடி சலுகைகள் தொடர்ந்து அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory