» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மாவட்டஆட்சியர் அலுவலகம் முற்றுகை

வியாழன் 8, நவம்பர் 2018 11:46:30 AM (IST)
இந்து மக்கள் கட்சி சார்பில் திருநெல்வேலி மாவட்டஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா வெங்கடேஸ்வரபுரம் கிராமமக்கள் ஊர் நாட்டாமை கருப்பசாமி தலைமையில் இந்து மக்கள் கட்சியுடன் இணைந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். பின்னர் அவர்கள் ஆட்சியருக்கு அளித்த மனுவில் கூறியுள்ளதாவது, வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் அருந்ததியர் இன மக்களாகிய நாங்கள் சுமார் 450 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் ஊர் பஞ்சாயத்து அலுவலக செயலாளர் குமார் தொடர்ந்து எங்கள் சமுதாய மக்களுக்கு எதிராக வன்மம் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த 3 ம் தேதி பஞ்சாயத்து அலுவலக செயலாளர் குமார் மற்றும் போலீசார் எங்கள் பகுதிக்கு வந்து அங்குள்ள சின்னவிநாயகர் கோவிலை இடிக்க முயன்றனர். இது குறித்து நாங்கள் கேட்டதற்கு பஞ்சாயத்து இடத்தில் கோவில் இருப்பதால் இடிப்பதாக கூறினார்கள். தொடர்ந்து கோவிலின் மேற்கூரையை இடித்து தள்ளினர். மேலும் எங்கள் ஊர் இளைஞர்களையும் மேற்படி குமார் காவல்துறையை வைத்து மிரட்டியுள்ளார். எனவே தாங்கள் (ஆட்சியர்) குமார் மற்றும் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory