» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மலேசியாவில் தவித்த சங்கரன்கோவில்தொழிலாளர்கள் மீட்பு

வியாழன் 8, நவம்பர் 2018 12:07:14 PM (IST)

மலேசியாவில் சாப்பாடு மற்றும் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தி வந்த திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த 48 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டை, தாருகாபுரம், மலையடிக்குறிச்சி பகுதிகளை சேர்ந்த 48 தொழிலாளர்கள் கடந்த 4 மாதத்திற்கு முன்பு தனியார் நிறுவனம் மூலம் மலேசியாவிற்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி என தெரிவிக்கப்பட்டது.அங்கு சென்றவர்களுக்கு நிறுவனத்தினர் தங்க இடம் கொடுத்து பணி கொடுத்துள்ளனர்.முதல் மாதம் சம்பளம் மட்டும் தொழிலாளர்களுக்கு அந்த நிறுவனம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக சாப்பாடு மற்றும் சம்பளம் கொடுக்காமல் நிறுவனத்தினர் தமிழக தொழிலாளர்களை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் அவர்கள் பட்டினியால் வாடியுள்ளனர். ஒரு வேளை சாப்பாடு மட்டுமே கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த தொழிலாளர்களை சம்பவம் பற்றி வெளியே தகவல் தெரிவித்து விடக்கூடாது என அவர்களை கண்காணிக்க சிலரை நிறுவனம் நியமனம் செய்துள்ளது. சம்பவ இடத்தில் கண்காணிப்பு கும்பல் இல்லாத நேரத்தில் அந்த வழியாக வந்த தமிழகத்தை சேர்ந்த மற்றொரு தொழிலாளி மூலம் பாதிக்கப்பட்ட 48 தொழிலாளர்களும், தங்களது ஆபத்தை செல்போனில் வீடியோ எடுத்து தங்கள் ஊரில் உள்ளவர்களுக்கு அனுப்பி வைக்க கூறியுள்ளனர். அதன்பேரில் அவரும் அனுப்பி வைத்துள்ளார்.

அந்த வீடியோவை பார்த்த பாதிக்கப்பட்டவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். அந்த வீடியோ சங்கரன்கோவில் பகுதியில் உள்ள அனைவருக்கும் பரவியது. இந்நிலையில் அந்த வீடியோ மலேசியாவிலும் பரவ தொடங்கியது. இது அங்குள்ள தமிழ் வம்சாவளி எம்.எல்.ஏ. காமாட்சி துரைராஜிற்கும் சென்றது. அவர் உடனே தமிழக தொழிலாளர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் வீடியோ மூலம் அவர்களது உறவினர்கள் அனைவரும் பயப்பட வேண்டாம். இந்த தொழிலாளர்கள் அனைவரையும் மீட்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தாருடன் பேசி அவர்களின் ஊதியத்தை பெற்று தந்து நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அவர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory