» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மனைவிக்கு கத்திக்குத்து கணவனுக்கு போலீஸ் வலை

வியாழன் 8, நவம்பர் 2018 5:31:08 PM (IST)

தென்காசி அருகே குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

தென்காசியை அருகே மேலமெஞ்ஞானபுரம் அண்ணா தெருவை சேர்ந்தவர் ஏழுமலை ( 43). இவரது மனைவி கலா ( 40). இவர்கள் இருவருக்கும் இடையில் தீபாவளி அன்று குடும்ப தகராறு ஏற்பட்டதாம். இந்நிலையில் நேற்று காலையில் கலா வீட்டில் இருந்த போது ஏழுமலை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது மனைவி கலாவை குத்திட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

கத்திக்குத்து பட்ட கலா கூச்சல் போட்டதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி சென்று கலாவை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.இச்சம்பவம் குறித்து குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கலாவை கத்தியால் குத்திய அவரது கணவனை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் மாயம்

வெள்ளி 20, செப்டம்பர் 2019 8:19:29 PM (IST)

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory