» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சர்ச்சைகள் எழுந்ததால் சர்க்கார் பேனர்கள் அகற்றம்

வெள்ளி 9, நவம்பர் 2018 10:23:46 AM (IST)
சர்ச்சைகள் எழுந்துள்ளதால் சுரண்டையில் சர்கார் திரைப்பட பேனர்கள் அகற்றப்பட்டது.

தீபாவளிக்கு வெளியான சர்க்கார் திரைப்படம் குறித்து பல்வேறு சர்ச்சை எழுந்துள்ளது. அதில் சர்ச்சை குறியீடு காட்சிகள் நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக கருத்து தெரிவித்து பல தியேட்டர்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டம் சுரண்டை மில் சர்க்கார் திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்  முன்பு நேற்று இரவில்  நகர அதிமுக செயலாளர் சக்திவேல் தலைமையில் அதிமுகவினர் விஜய் நடித்த சர்க்கார் பட பேனர்களை அகற்ற கூறியதை தொடர்ந்து பேனர்கள் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory