» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தனியார் இடத்தில் அனுமதியின்றி பிணம் புதைப்பு : போலீஸில் புகார்

வெள்ளி 9, நவம்பர் 2018 10:45:19 AM (IST)
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே முதலியார்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் அனுமதியின்றி பிணம் புதைக்கப்பட்டதாகவும், கொலை செய்து புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கடையம் காவல் நிலையத்தில் நில உரிமையாளர் புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கடையம் ஒன்றியம் முதலியார்பட்டியைச் சேர்ந்தவர் காஜாமைதீன். இவருக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலம் முதலியார்பட்டியில் உள்ளது. இந்நிலையில் அவர் நேற்று வெளியூர் சென்றிருந்த போது பொட்டல் புதூரைச் சேர்ந்த கலிலுர் ரஹ்மான் மற்றும் 5 பேர் கேரள பதிவு எண் கொண்ட வாகனத்தில் ஒரு பிணத்தைக் கொண்டு வந்து காஜாமைதீனுக்குச் சொந்தமான இடத்தில் புதைத்துள்ளனர். 

இது குறித்துத் தகவலறிந்து வந்த காஜாமைதீன் இது குறித்து உடனடியாக கடையம் போலீஸில் புகாரளித்துள்ளார். இது குறித்து உரிய விசாரணை நடத்துவதாக போலீஸார் கூறிய நிலையில் கலிலுர் ரஹ்மான் மர்ம நபர்களுடன் சேர்ந்து யாரையாவது கேரளாவில் கொலை செய்து கொண்டு வந்து இங்கு புதைத்திருக்கலாம் என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் விரைந்து விசாரித்து பிணத்தை அப்புறப்படுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory