» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் மழை

வெள்ளி 9, நவம்பர் 2018 12:11:21 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இருப்பினும் அணைகளுக்கு நீர் வரத்து குறைந்தே காணப்படுகிறது.

நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக பகலில் வானம் மேகமூட்டத்துடனும் மாலையில் மழையும் பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை அதிகபட்சமாக ராதாபுரம் கடலோரப்பகுதியில் 5.2 மில்லிமீட்டரும், நம்பியாறு அணைப்பகுதியில் 5 மில்லிமீட்டரும், பாபநாசம் அணைப்பகுதியில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மழை பெய்தாலும் மாவட்டத்தின் பிரதான அணைகளுக்கு குறைந்த அளவே நீர்வரத்து உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory