» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் பெண் காவலருக்கு பன்றி காய்ச்சல் ? : சிகிச்சைக்கு மறுத்ததால் பரபரப்பு

வெள்ளி 9, நவம்பர் 2018 1:01:36 PM (IST)

திருநெல்வேலியில் கர்ப்பிணி பெண் காவலர் பன்றி காய்ச்சல் அறிகுறியால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தற்போது பன்றிகாய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் அறிகுறி அதிகம் காணப்படுகிறது. இதில் பன்றி காய்ச்சல் இறப்பால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலியில் போக்குவரத்து காவலராக பணிபுரியும் பெண் ஒருவர் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். 

அவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் அறிகுறி இருந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் சாேதித்த போது பன்றிகாய்ச்சல் என தெரிய வந்தது. இதனால் அவர் பாளை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றதாகவும் ஆனால் அவரை அனுமதிக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory