» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் தேதி : ஆட்சியர் அறிவிப்பு

வெள்ளி 9, நவம்பர் 2018 5:42:37 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 13 ம் தேதி நடைபெறுகிறது என நெல்லை ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி கோட்டத்தில் உள்ள திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சங்கரன்கோவில், திருவேங்கடம் மற்றும் மானூர் வட்டங்களைச் சார்ந்த விவசாயிகளுக்கு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருநெல்வேலி உதவி ஆட்சியர்ள் தலைமையில் 13.11.2018 செவ்வாய்கிழமை அன்று நண்பகல் 12 மணியளவில் திருநெல்வேலி சார்ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. மேற்படி கூட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சங்கரன்கோவில், திருவேங்கடம் மற்றும் மானூர் வட்டங்களைச் சார்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory