» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளை.,யில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

வெள்ளி 9, நவம்பர் 2018 6:06:39 PM (IST)

பாளை., மூளிக்குளம் பகுதியில் பெண்ணிடம் செயின் பறித்ததாக மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பாளையங்கோட்டை ராஜா குடியிருப்பை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகள் கார்த்திகா (21) . இவர் மூளிக்குளத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று வேலை முடிந்து நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியே வந்த மர்மநபர் கார்த்திகா கழுத்திலிருந்த சுமார் ஒன்றரை பவுன் செயினை பறித்து விட்டு மாயமாகியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory