» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

புளியங்குடியில் இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

வெள்ளி 9, நவம்பர் 2018 8:44:22 PM (IST)

புளியங்குடி அருகே இளம்பெண் மாயமானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புளியங்குடி அருகே உள்ள பாறைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவர் கேரளாவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சீதாலட்சுமி ( 50). இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த பெண்ணான மகேஸ்வரி (23) என்பவர் கடந்த 26-ந் தேதி வீட்டை விட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. 

சீதாலட்சுமி தனது மகளை அருகில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியுள்ளார் ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து புளியங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரியை தேடி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory