» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

டெங்கு பணியாளருக்கு பாலியல் தொந்தரவு : ஊராட்சி செயலர் மீது வழக்கு

சனி 17, நவம்பர் 2018 8:52:46 PM (IST)

டெங்கு பணியாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்ற ஊராட்சி செயலர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

சுரண்டை அருகே உள்ள அச்சங்குன்றத்தை சேர்ந்தவர் வைத்திலிங்கம் (46) ஊராட்சி செயலராக பணியாற்றி வருகிறார். இதே ஊராட்சியில் முருகன், அவரது மனைவி காளியம்மாள்(31) ஆகியோர் டெங்கு ஒழிப்பு கள பணியாளராக வேலை பார்த்து வருகின்றனர். தினமும் அலுவலகத்திற்கு கையெழுத்திட வரும்போது காளியம்மாளிடம் ஊராட்சி செயலர் வைத்தியலிங்கம் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக  கூறப்படுகிறது. 

இந்நிலையில் சம்பவத்தன்று பணியாளர்கள் அனைவரும் சென்ற பின்னர் அலுவலக அறையில் வைத்தியலிங்கம் காளியம்மாளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தாராம். காளியம்மாள் சத்தம் கேட்டு வெளியே சென்றிருந்த முருகன் வந்துள்ளார். பின்னர் அவர்களுக்கு மிரட்டல் விடுத்துவிட்டு வைத்திலிங்கம் சென்று விட்டார். இது குறித்து காளியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வைத்திலிங்கத்தை தேடி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory