» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் விரிவாக்கம்: கடைகளை காலிசெய்ய மாநகராட்சி நோட்டீஸ்

செவ்வாய் 4, டிசம்பர் 2018 4:45:07 PM (IST)

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள கடைகளை காலி செய்யுமாறு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் பழைய பேருந்து நிலையம் என்று அழைக்கப்படும் "அண்ணா பேருந்து நிலையம்" அமைந்துள்ளது. தற்போது பேருந்து நிலையம் மிகக்குறுகலாக இருப்பதால், பணிமனைக்குச் சொந்தமான இடத்தையும் சேர்த்து 3.36 ஏக்கர் பரபரப்பளவில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விரிவுபடுத்தப்படுகிறது என தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்திருந்தார். 

4 மாடி கட்டிடங்களுடன், லிப்ட், ஏசி, எஸ்கலேட்டர் உ்பட பல்வேறு வசதிகளுடன் சுமார் 51 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி பேருந்து நிலையம் மேம்படுத்தப்படுகிறது. இந்நிலையில், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் வருகிற 30ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே 2 நோட்டீஸ்கள் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது 3வதாக எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


மக்கள் கருத்து

வடிவேல்Dec 5, 2018 - 01:35:37 PM | Posted IP 172.6*****

1m கேட் 2m கேட் பலம் என்ன ஆச்சி?

ராஜாDec 4, 2018 - 06:31:45 PM | Posted IP 172.6*****

வணிகர் சங்கம் இருக்கா? அதுவரை வியாபாரி என்ன செய்வான்

பொன்குமார்Dec 4, 2018 - 05:20:49 PM | Posted IP 162.1*****

ஏற்கனவே கூறிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மீன்வளக்கல்லூரி அருகில் அமைக்கவிருந்தது என்ன ஆனது? பாளையம்கோட்டை சாலை 4 வழிச்சாலை ஆக மாற்ற ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது என்னே ஆனது?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மனைவியை தாக்கி கொலைமிரட்டல் கணவர் கைது

செவ்வாய் 18, டிசம்பர் 2018 7:11:22 PM (IST)

லாரி மோதிய விபத்தில் பெயிண்டர் படுகாயம்

செவ்வாய் 18, டிசம்பர் 2018 6:17:19 PM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd






Tirunelveli Business Directory