» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் ஜெ. நினைவு தின மெளன அஞ்சலி ஊர்வலம்

புதன் 5, டிசம்பர் 2018 12:43:22 PM (IST)



தூத்துக்குடியில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலம் நடைபெற்றது. 

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமையில், செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக குரூஸ் பர்னாந்து சிலை முன்பு துவங்கிய இந்த ஊர்வலத்தில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுததப்பட்டது.  பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, "தூத்துக்குடியில் மறைந்த முன்னாள்முதல்வர் ஜெயலலிதாவுக்கு முழு உருவ வெண்கல சிலை விரைவில் அமைக்கப்படும்" என கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனம், முன்னாள் எம்எல்ஏக்கள் மோகன், முன்னாள் துணை மேயர் சேவியர், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் செல்லத்துரை, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேகர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டாக் ராஜா, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் தளபதி கே.பிச்சையா, மாவட்ட மகளிரணி செயலாளர் குருத்தாய், மாவட்ட மருத்துவ பிரிவு செயலாளர், ராஜசேகரன், மாவட்ட மீனவரணி செயலாளர் டார்சன், மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் துறையூர் கணேசன் மாவட்ட சிறுபான்மை செயலாளர் சாலமோன் ஜெயசீலன்,  முன்னாள் வாரிய தலைவர் இரா.அமிர்தகணேசன், வட்டச் செயலாளர்கள் முருகன், ராமகிருஷ்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

கவுண்டமணிDec 5, 2018 - 05:59:21 PM | Posted IP 162.1*****

சேவியர் பெயர் போட்டாச்சிடா

வடிவேல்Dec 5, 2018 - 01:28:07 PM | Posted IP 172.6*****

ஏன்டா சேவியர் பேரை போடவே இல்லை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மனைவியை தாக்கி கொலைமிரட்டல் கணவர் கைது

செவ்வாய் 18, டிசம்பர் 2018 7:11:22 PM (IST)

லாரி மோதிய விபத்தில் பெயிண்டர் படுகாயம்

செவ்வாய் 18, டிசம்பர் 2018 6:17:19 PM (IST)

Sponsored Ads




Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory