» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் : பாளையங்கோட்டையில் பரபரப்பு

புதன் 5, டிசம்பர் 2018 5:42:36 PM (IST)

பாளையங்கோட்டை அருகே கைக்குழந்தையை கொன்ற தாய் தற்கொலைக்கு முயன்ற போது போலீசாரிடம் சிக்கினார்.

பாளை அருகே உள்ள மேலப்பாட்டத்தை சேர்ந்தவர் காசி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி சந்திரா. இவர்களது மகள் மகராசி(25). இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நாராயணன் என்பவருடன் திருமணமாகி சென்னையில் வசித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக மகராசி கணவரிடம் கோபித்து கொண்டு மேலப்பாட்டத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை சிவமகேஸ்வரி(2 ½ வயது) மயங்கிய நிலையில் வீட்டில் இறந்து கிடந்தாள். 

பேத்தி இறந்து கிடப்பதை பார்த்த சந்திரா, மகராசியை தேடிய போது அவரை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் குறித்து பாளை தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரகுபதிராஜா, எஸ்.ஐ.பரமசிவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் மகராசியை தீவிரமாக தேடிய போது அவர் அப்பகுதியில் உள்ள காட்டில் நின்று கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்து நடத்திய விசாரணையில் கணவர் நாராயணன் எங்களை சென்னைக்கு அழைத்து செல்ல வராததால் விரக்தியில் இருந்தேன். இதையடுத்து குழந்தைக்கு நேற்றிரவு விஷம் கொடுத்து கொன்று விட்டதாகவும், தான் தற்கொலை செய்து கொள்ள காட்டுப்பகுதிக்கு வந்ததாகவும் தெரிவித்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory