» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை

வியாழன் 6, டிசம்பர் 2018 2:18:41 PM (IST)

சேரன்மகாதேவியில் குடும்ப தகராறு காரணமாக மனைவி பிரிநது சென்றதால் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி, பொழிக்கரையை சேர்ந்த ரத்தினசாமி மகன் ஆறுமுக பெருமாள் (26). இவர் அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது மனைவி தகராறு செய்து விட்டு தாய் வீடான குருவன் கோட்டைக்கு சென்று விட்டார். 

இதில் மனம் உடைந்த ஆறுமுகப்பெருமாள் வி‌ஷம் குடித்தார். அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory