» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஜெயலலிதா படத்தை அவமதித்ததாக ஒருவர் கைது

வியாழன் 6, டிசம்பர் 2018 7:11:49 PM (IST)

சங்கரன்கோவிலில் ஜெயலலிதா படத்தை அவமதித்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மறைந்த முன்னாள்முதல்வர் ஜெயலலிதா நினைவுநாளையொட்டி சங்கரன்கோவிலில் பேருந்து நிலைய பகுதிகளில் அதிமுக மற்றும் அமமுக சார்பில் ஜெயலலிதா படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிமுக சார்பில் வைக்கப்பட்ட படம் சேதப்படுத்தப்பட்டிருந்தது.

அமமுக சார்பில் வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை மர்மநபர்கள் தூக்கி சென்றுள்ளனர். இதை அறிந்த அமமுக மற்றும் அதிமுகவினர் அங்கு திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இரு தரப்பினரும் தனித்தனியே புகார் அளித்தனர்.அதிமுக அளித்த புகாரின் பேரில் மாரியப்பன் (51) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory