» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் மனு

வியாழன் 13, டிசம்பர் 2018 12:17:39 PM (IST)


சுரண்டை அருகே உள்ள வீரகேரளம்புதூர் தாலுகா பரங்குன்றாபுரம் விலக்கில் திறக்கப்பட்டிருக்கும் புதிய டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள் வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தனர். 

பரங்குன்றாபுரம் அருகே ரோடு பிரிகின்ற இடத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது இந்த கடையை இங்கு அமைத்ததன் மூலம் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் எனவும் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் கூறி பொதுமக்கள் கடையை நிரந்தரமாக மூட அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பரங்குன்றாபுரதிலிருந்து கலிங்கப்பட்டி செல்லும் ரோட்டில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இப்பகுதி, பெண்கள் பீடி கடைக்கு செல்லுகின்ற பகுதி ஆதலால், கடையை உடனடியாக அகற்ற வேண்டி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். 

இதனை ஏற்று கடை மூடப்பட்டது. இந்நிலையில் பரங்குன்றாபுரத்திலிருந்து  சுரண்டை வரும் ரோட்டில், மரியதாய்புரம் ரோடு பிரிகின்ற இடத்தில் புதிய டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியிலிருந்து பரங்குன்றாபுரம், மரியதாய்புரம், லட்சுமிபுரம், அச்சம்குன்றம், கருவந்தா, குறிச் சான்பட்டி,  முதலான கிராமங்களுக்கு செல்லுகின்ற பொதுமக்கள் பரங்குன்றாபுரம் விலக்கில் இறங்கி நடந்து இப்பகுதிக்கு செல்கின்றனர். இந்நிலையில் பரங்குன்றாபுரம், மரியதாய்புரம் ரோடு பிரியக்கூடிய இடத்தில் புதிய டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் இது பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறாக இருக்கும். 

நடந்து செல்லும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகும் எனக் கூறி கடையை நிரந்தரமாக அகற்ற வேண்டி பொதுமக்கள் தாசில்தார் நல்லையாவிடம் மனு அளித்தனர். இதில் மதிமுக மாவட்ட மகளிரணி செயலாளர் தேனம்மாள், சுதா, ராணி, மகேஸ்வரி, பாப்பா, ரீகன், அமிர்தராஜ், பொன்னுத்துரை, குமாரவேல் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory