» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளை சித்த மருத்துவக்கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்

வியாழன் 10, ஜனவரி 2019 8:24:41 PM (IST)

பாளை முருகன் குறிச்சியில் உள்ள அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் தமிழ் கலாச்சாரப்படி மாணவ- மாணவிகள் இன்று  பொங்கல் கொண்டாடினர்.

தமிழர் திருநாளான பொங்கல் விழா வரும் 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. பாளை முருகன் குறிச்சியில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லுாரியில் தமிழ் கலாச்சாரப்படி மாணவ- மாணவிகள் இன்று சமத்துவ பொங்கல் கொண்டாடினர். 

இதையொட்டி கல்லூரி பகுதி முழுவதும் வண்ண பொடிகளால் கோலம் போடப்பட்டிருந்தது. மேலும் கரும்பு, மஞ்சள் குலைகள் வைக்கப்பட்டிருந்தது. மாணவ- மாணவிகள் பொங்கலிட்டு கொண்டாடினர்.

இதில் கலந்துகொண்ட பெரும்பாலான மாணவ- மாணவிகள் தமிழ் கலாச்சாரத்தின்படி வேஷ்டி, சட்டை மற்றும் சேலை அணிந்து கலந்து கொண்டனர். அவர்கள் குலவையிட்டு பொங்கலிட்டனர்.இந்த விழாவில் சித்தா கல்லூரியின் முதல்வர் நீலாவதி, பேராசிரியர்கள், பயிற்சி மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory