» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வட்டாட்சியர் அலுவலக பிரச்னை: ஜன. 14 ல் கையெழுத்து இயக்கம்

வெள்ளி 11, ஜனவரி 2019 10:49:54 AM (IST)

கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகப் புதிய கட்டடத்தை நகரப் பகுதிக்குள் அமைக்க வலியுறுத்தி, வரும் 14 ம் தேதி கையெழுத்து இயக்கம் தொடங்க உள்ளதாக கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் முகமதுஅபூபக்கர் தெரிவித்தார்.

கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் தற்போது மின்வாரிய அலுவலகம் அருகே தற்காலிக கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வட்டாட்சியர் அலுவலகப் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா காசிதர்மம் பகுதியில் அண்மையில் நடைபெற்றது.

வட்டாட்சியர் அலுவலகத்தை நகரப் பகுதியில் அமைக்க வலியுறுத்தி, அனைத்து கட்சிகள், அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டம், கடையடைப்புப் போராட்டங்கள் நடைபெற்றன.இந்நிலையில், சட்டப்பேரவையில் முகமதுஅபூபக்கர் இதுகுறித்து பேசிய நிலையில், வட்டாட்சியர் அலுவலகம் காசிதர்மத்திலேயே அமைக்கப்படும் என அமைச்சர் உதயகுமார் பதிலளித்தார். 

இதுகுறித்து முகமதுஅபூபக்கர் எம்எல்ஏ கூறும் போது: மக்களின் நியாயமான உணர்வுகளை மதிக்காமல் அரசு நடந்துகொள்வது வேதனையாக உள்ளது. வட்டாட்சியர் அலுவலகத்தை நகரப் பகுதியில் அமைக்க வலியுறுத்தி, அனைத்து கட்சியினர், வர்த்தக சங்கத்தினர்,பொதுமக்கள் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்திய பிறகும், அதுகுறித்து ஆய்வு செய்யாமல், மக்கள் போராட்டங்களை அரசு அலட்சியப்படுத்தி வருகிறது. இந்த விஷயத்தில் அமைச்சர் சொல்லக்கூடிய காரணம் ஏற்கக் கூடியது அல்ல.எனவே, கோரிக்கையை வலியுறுத்தி, ஜன. 14 ஆம் தேதி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கிவைக்க உள்ளேன் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory