» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலம் அருகே மினி பஸ்-பைக் மோதல் : குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் பலி

வெள்ளி 11, ஜனவரி 2019 12:39:28 PM (IST)

குற்றாலம் அருகே மினிபஸ்-பைக் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சுங்காங்கடையைச் சேர்ந்தவர்கள் ராமதாஸ் மகன் சிவன் (25) மற்றும் அஜீத் (23). நண்பர்களான இருவரும் மோட்டார் பைக் மெக்கானிக் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் இருவரும் பைக்கில் குற்றாலம் வந்தனர். அருவிகளில் குளித்து விட்டு சொந்த ஊருக்கு பைக்கில் திரும்பிச் சென்றனர். பைக் குற்றாலம் அருகே நன்னகரம் அம்பேத்கர் சிலை அருகே வளைவில் வந்த பேர்து எதிரே வந்த மினி பஸ்சும் பைக்கும் நேருக்கு நேர் மோதியது. 

இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவன், அஜீத் இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவம் குறித்து குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார் வழக்கு பதிவு செய்து விபத்தில் இறந்த சிவன், அஜீத் இருவரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory