» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வாஜ்பாயுடன், பிரதமர் மோடியை ஒப்பிட முடியாது : நெல்லையில் வைகோ பேட்டி

வெள்ளி 11, ஜனவரி 2019 5:40:04 PM (IST)

வாஜ்பாயுடன், பிரதமர் மோடியை ஒப்பிட முடியாது என திருநெல்வேலியில் மதிமுக பொது செயலாளர் வைகோ கூறினார். 

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன், பிரதமர் மோடியை ஒப்பிட முடியாது. வாஜ்பாய் நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டியவர். ஆனால் மோடி மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறார்.மேலும் மக்களிடையே இந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை திணித்து வருகிறார். வரும் பாராளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்து அதன்மூலம் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும். மோடி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார். 

இதனால் நடுத்தர மக்களும், விவசாயிகளும், வியாபாரிகளும் வெறுப்பில் உள்ளனர். எனவே பா.ஜனதா கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் 140 இடங்கள் கூட கிடைக்காது. படுதோல்வி அடையும்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்களை ஏமாற்றிவிடலாம் என்ற தந்திரத்தில் ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்குவதாக அறிவித்து உள்ளார். மக்கள் அவரை பற்றி நன்றாக புரிந்து வைத்து உள்ளனர். அவருடைய ஆட்சி 2019ம் ஆண்டு இறுதி வரை நடக்குமா என்பதே சந்தேகம்தான்.இவ்வாறு அவர் கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory