» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஸ்பீக்கர் செட் வாடகைக்கு எடுத்து சென்று மோசடி : 3 பேர் மீது வழக்கு

வெள்ளி 11, ஜனவரி 2019 7:19:26 PM (IST)

பரப்பாடி அருகே ஸ்பீக்கர் செட் எடுத்து சென்று மோசடி செய்ததாக 3 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

நாங்குநேரி அருகே பரப்பாடி பகுதியினை சேர்ந்தவர் முத்துபாண்டி (33). ஸ்பீக்கர் செட் வாடகைக்கு எடுத்து தொழில் செய்து வருகிறார். இவரிடம் சென்ற நவ 4ம் தேதி சேரன்மகாதேவி அருகேயுள்ள ஈசாக், டேனியல் ஸ்டீபன், ஜார்ஜ் ஆகிய 3 பேர்ஸ்பீக்கர் செட் வாடகைக்கு வேண்டுமென கேட்டார்களாம். ரூ.3500 வாடகை பேசி ஸ்பீக்கர் செட் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் மூன்று பேரும் ஸ்பீக்கரை திரும்ப கொடுக்கவில்லையாம். மொத்த மதிப்பு ரூ. 4 லட்சம் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிந்து மூன்று பேரையும் தேடி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory