» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் ரேஷன் கடையை பாெதுமக்கள் முற்றுகை

சனி 12, ஜனவரி 2019 10:19:24 AM (IST)

திருநெல்வேலி நகரத்தில் ரேஷன் கடையை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் .

திருநெல்வேலி நகரம்,  காமாட்சி அம்மன் கோயில் தெருவில் உள்ள ரேஷன் கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பைப் பெற குடும்ப அட்டைதாரர்கள் வரிசையில் வெள்ளிக்கிழமை காத்திருந்தனர்.  பிற்பகலில் நாள் ஒன்றுக்கு சுமார் 300 பேருக்கு தான் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கக் கூறியுள்ளதாகவும்,  அந்த அளவுக்கு தான் பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து    விநியோகத்தை ஊழியர்கள் நிறுத்தினர். இதற்கு பொதுமக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.  

காலை முதல் காத்திருக்கும் பொதுமக்களுக்கு உடனடியாக பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கக் கோரி ரேஷன் கடை முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஊழியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு  தொகுப்பு முறையாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory