» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் களைகட்டும் பொங்கல் பொருட்கள் விற்பனை

சனி 12, ஜனவரி 2019 10:52:12 AM (IST)

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் நெல்லையில் பொங்கல் பொருட்களின் விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது.

வரும் செவ்வாய்கிழமை பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியின் பல பகுதிகளில் பொங்கல் விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. பனை ஓலைகள், மூன்று கண் மண் அடுப்புகள், செங்கரும்பு, கொம்பு மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளன. 

மூன்று கண் மண் அடுப்புகள் 150 ரூபாய்க்கும் வண்ணக் கோலப்பொடிகள் 200 கிராம் 10 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றனர். 15 கட்டுகள் கொண்ட செங்கரும்பு இந்த ஆண்டு 350 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை விற்பனையாவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.நாளை முதல் காய்கறிகளின் விற்பனை சூடு பிடிக்கும் எனவும் விவசாயிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory