» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

யானை அட்டகாசத்தில் நெற்பயிர்கள் கடும் சேதம்

சனி 12, ஜனவரி 2019 12:15:26 PM (IST)

கல்லிடைக்குறிச்சி அருகே விளை நிலங்களில் யானை புகுந்து அட்டகாசம் செய்ததில் நெற்பயிர்கள் கடும் சேதமடைந்தன.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (55). இவர், மணிமுத்தாறு பிரதான கால்வாய்  பாசனத்தில் சீரான்குளம் பேவிளையிலுள்ள நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளார். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள இப்பகுதியில் வியாழக்கிழமை இரவு புகுந்த ஒற்றை யானை வயலில் அட்டகாசம் செய்ததில் நெற்பயிர் சேதமடைந்து விவசாயிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து தகவலறிந்த அம்பாசமுத்திரம் வனச்சரகர் கார்த்திகேயன் தலைமையில் வனப்பணியாளர்கள் மலையடிவாரத்தில்  நடமாடி வரும் யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில்  வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory