» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையப்பர் கோவில் தைப்பூச தீர்த்தவாரி திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது

சனி 12, ஜனவரி 2019 12:30:05 PM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரசித்தி பெற்ற திருநெல்வேலி டவுண் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச தீர்த்தவாரி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அது போல் இந்த ஆண்டுக்கான தைப்பூச தீர்த்தவாரி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகளுக்குப் பின் கொடி பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். வரும் 15-ஆம் தேதி சுவாமி நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சியும் 16-ஆம் தெதி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory