» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரசு கால்நடை மருத்துவமனையில் குதிரைக்கு குடல் அறுவை சிகிச்சை

சனி 12, ஜனவரி 2019 2:05:03 PM (IST)

நெல்லை அரசு கால்நடை மருத்துவமனையில் குதிரைக்கு குடல் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதில் குதிரையின் வயிற்றில் கிடந்த கயிறு, பிளாஸ்டிக் உருண்டைகள் அகற்றப்பட்டது.

தென்காசியை சேர்ந்தவர் ஜார்ஜ். இவர் தன‌து பண்ணை வீட்டில் 12 குதிரைகளை வளர்த்து வருகிறார். இவரிடம் உள்ள ஒன்றரை வயது பெண் குதிரை கடந்த 21 நாட்களுக்கு முன்பு வயிற்று வலியால் அவதிப்பட்டது. அங்கு சிகிச்சை அளித்தும் வயிற்று வலி சரியாகவில்லை.இதையடுத்து ஜார்ஜ் அந்த குதிரையை  ராமையன்பட்டியில் உள்ள அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு கடந்த 2ந்தேதி அழைத்து வந்தார். அங்கு குதிரையை சோதனை நடத்தியதில்  குடல்கள் வீங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

குதிரையின் வயிற்றில் ஸ்கேன் செய்து பார்த்ததில் குடலில் ஜீரணம் ஆகாத நைலான் கயிறு, பிளாஸ்டிக் உருண்டைகள் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அறுவை சிகிச்சை துறை தலைவர் தர்மசீலன் தலைமையில் டாக்டர்கள்  குதிரைக்கு அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.இந்த சிகிச்சை மூன்றரை மணி நேரம் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு 4 மணி நேரம் கழித்து குதிரை மயக்க நிலையில் இருந்து மீண்டும் எழுந்து நின்றது.  இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த டாக்டர்கள் குழுவிற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஜாண்சன் ராஜேஷ்வர் பாராட்டு தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory