» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாவூர்சத்திரத்தில் 297 பேருக்கு தாலிக்கு தங்கம் : எம்.எல்,ஏ. வழங்கினார்

சனி 12, ஜனவரி 2019 5:33:55 PM (IST)
பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற விழாவில் 297 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கத்தினை  செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்எல்ஏ., வழங்கினார்.

பாவூர்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டத்தின் கீழ் சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராம்லால் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அதிகாரி பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அதிகாரி கணேசன் வரவேற்றார்.

தென்காசி எம்எல்ஏ., செல்வமோகன்தாஸ்பாண்டியன் பங்கேற்று 297 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், அட்மா சேர்மன் கணபதி, நிர்வாகிகள் ராமசாமி, குணம், பால் அன்புராஜா, ரமேஸ், இருளப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் நன்றி கூறினார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory