» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சமத்துவ பொங்கல் விழா கொண்டாடிய மாணவிகள்

சனி 12, ஜனவரி 2019 6:08:04 PM (IST)



குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரி வணிகவியல் துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரி வளாகத்தில் வணிகவியல் துறை சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவிற்கு வணிகவியல் துறைத்தலைவி காமினி (எ) முத்துகிருஷ்ணம்மாள் தலைமை தாங்கினார். துணைத் தலைவி கீதாஞ்சலி மற்றும் பேராசிரியைகள் சங்கர கோமதி, சண்முகசுந்தரி, முத்துலெட்சுமி, ராமலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர்(பொறுப்பு) கல்யாணி, வணிகவியல்துறை தலைவி மற்றும் சுயநிதிப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கீதா வணிகவியல்துறை பேராசிரியை மாலதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.  

விழாவில் பேராசிரியைகள் ராமலெட்சுமி, ரதி, சங்கரி, முருகேஷ்வரி, ஜோதி, மகாதேவி, சிந்து, திவ்யா, ராகதேவி, சுந்தரி, செல்வராணி, பொன்சக்தி சூர்யா மற்றும் வணிகவியல் துறை மாணவிகள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலிட்டனர். அதனை தொடர்ந்து பேராசிரியைகள், மாணவிகள் அனைவருக்கும் பொங்கல் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் வணிகவியல்துறை மாணவிகள் முத்துச்செல்வி, முருகேஷ்வரி,  காயத்தரி, ப்ரியா, சுமதி, சுபா, சோபியா, ஜெயப்ரியா,சித்ரா, ராமலெட்சுமி, லெட்சுமி, சித்ரா,  துர்க்காதேவி, வாசுகி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவி முத்துச்செல்வி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory