» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் பலி

சனி 12, ஜனவரி 2019 7:28:02 PM (IST)

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே வாகனம் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆலங்குளம் அருகே நெட்டூரை சேர்ந்தவர் ஆனந்தகைகாெண்டான் (31). இவருக்கு மனைவி இரு மகன்கள் உண்டு. சம்பவத்தன்று இரவு வேலையை முடித்து விட்டு அவர் வீடு திரும்பி கொண்டிருந்தார். நாச்சியார்புரம் பகுதியில் வருகையில் அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியதில் ஆனந்தகைகாெண்டான் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்த வீகே புதூர் போலீசார் இறந்தவர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory