» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தாலுகா அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

சனி 12, ஜனவரி 2019 7:58:24 PM (IST)




தென்காசி தாலுகா அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

தென்காசி தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவிற்கு தாசில்தார் சங்கர் தலைமை தாங்கினார். கரும்பு, மஞ்சள், பழம், வெற்றிலை, பாக்கு, நெல், பச்சரிசி வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல் வைத்து தாலுகா அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.விழாவில் குடிமை பொருள் வழங்குதல் தனி தாசில்தார் அனிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்தாசில்தார் வெற்றிச்செல்வி, ஆதிதிராவிடர்நல தனித்தாசில்தார் செல்வநாயகம், கோட்ட கலால் அலுவலர் சுதந்திராஜ், துணைத் தாசில்தார்கள் ஞானசேகரன், ஜெகநாதன், முருகன், முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் ஆறுமுகம், கருணாகரன், மகேந்திரன், வீரலெட்சுமி, ஜெயந்தி, சுப்பிரமணியன், பிரகலாதன், ஆம்ஸ்ட்ராங், பால்ராஜ். ரமேஷ் மீனாட்சி மற்றும் தாலுகா அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory