» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தொண்டர்களின் எண்ணப்படி கூட்டணி அமையும் : தூத்துக்குடியில் ஜிகே வாசன் பேட்டி

சனி 9, பிப்ரவரி 2019 7:29:52 PM (IST)
தொண்டர்களின் எண்ணப்படி கூட்டணி அமையும் என தமாகா தலைவர் ஜிகே வாசன் தூத்துக்குடியில் கூறினார்.

தூத்துக்குடி கோரம்பள்ளத்திலுள்ள எஸ்டிஆர் பள்ளி வளாகத்தில் எஸ்டி சாமுவேல்நாடார் வெண்கல சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளி நிறுவனர் எஸ்டிஆர் விஜயசீலன் தலைமை தாங்கினார். இதில் தமாகா தலைவர் ஜிகே வாசன் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, 

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் எஸ்டிஆர் விஜயசீலன் தனது பள்ளி வளாகத்தில் அவரது தாத்தா எஸ்டி சாமுவேல்நாடார் சிலையை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். மறைந்த சாமுவேல் நாடார் 1940ம் ஆண்டுகளிலேயே தூத்துக்குடியின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர்களில் ஒருவர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமாகா யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து தேர்தல் நெருங்கும் நேரத்தில் தனது நிலைப்பாடை அறிவிக்கும். கட்சி தொடங்கிய 4 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. தொண்டர்களின் எண்ணப்படி கூட்டணி அமையும்

மக்களின் உணர்வுகளை பூர்த்தி செய்து வருகிறது. ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். தற்போது வெளிவரும் கூட்டணி குறித்த செய்திகள் அனைத்தும் ஹேஸ்யமும், ஜோதிடமும் போல தான். தமிழகஅரசு பட்ஜெட்டை வரவேற்க அதிக காரணங்கள் உள்ளது . விவசாயம், கல்வி, வேலை வாய்ப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது வரவேற்கதக்கது. விவசாயிகளின் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும். அதற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். கல்வி துறைக்கும் அதிக நிதி தேவை.

பட்டாசு தொழில் நலிந்து வருகிறது. அவர்களின் மறுவாழ்வுக்கு அரசு நல்ல செய்தி தர வேண்டும். தூத்துக்குடியில் வெறும் பூங்காக்கள் மட்டும் அமைந்து வருகிறது. விரைவில் அடிப்படை வசதிகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். தூத்துக்குடியின் போக்குவரத்து நெரிசலை தீர்க்க விவிடி சிக்னல் மேம்பாலம் கட்ட வேண்டும். பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். ரயில் நிலையத்தை மீளவிட்டானுக்கு மாற்ற வேண்டும். சாத்தான்குளத்தில் புதிய பணிமணை திறக்க வேண்டும். 

விளைநிலங்களில் காற்றாலை அமைக்க கூடாது. சுதந்தர போராட்ட வீரர்களின் மணிமண்டபங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என தமாகா சார்பில் கோரிக்கை விடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி எம்எல்ஏ., கீதாஜீவன், எஸ்டிஆர் விஜயசீலன், பொன்சீலன், சாமுவேல், இரா.ஹென்றி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

கர்ணராஜ்Feb 11, 2019 - 08:54:47 AM | Posted IP 103.2*****

ரயில் நிலையத்தை மீளவிட்டானுக்கு மாற்ற வேண்டும். நல்லது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தையும் கவனியுங்க தலைவர்களே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory