» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சாலையில் தடுப்பு கம்பி இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம்

ஞாயிறு 10, பிப்ரவரி 2019 12:03:19 PM (IST)
சுரண்டை செண்பகம் கால்வாயில் தடுப்பு கம்பி இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் உடனடியாக தடுப்பு கம்பி அமைக்க காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை மாவட்டம் சுரண்டை சாம்பவர்வடகரை ரோட்டில் அமைந்துள்ளது செண்பகம் கால்வாய். இக்கால்வாய் இரட்டை குளத்தில் இருந்து இலந்தை குளத்தில் மறுகால் பாய்ந்து தண்ணீர் செல்லும் பிரதான கால்வாய் ஆகும். இக்கால்வாய் சுரண்டை சாம்பவர்வடகரை ரோட்டில் அமைந்துள்ளது இந்த வழியாக சுமார் 800க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் டிடிடிஏ நடுநிலைப் பள்ளிக்கும்  சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பீடி சுற்றும் தொழில் கொண்ட பெண்கள் பீடி கடைக்கு வருவதற்கும் சுரண்டை சிவகுருநாதபுரம் முப்பிடாரி அம்மன் கோவில் மற்றும் சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயம் செல்லும் மக்களும் மிக அதிகமாக உபயோகப்படுத்தி வருகின்றனர். இந்த சாலை வழியாக பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பேருந்துகள், அரசு பேருந்துகள், கொல்லம் - திருமங்கலம் சாலையில் பயணிக்கும்  வாகனங்கள் சென்று வருகின்றன. 

ஆனால் இந்த சாலையில் முப்பிடாதி அம்மன் கோவிலுக்கு பின்புறமுள்ள பகுதியில் செண்பக கால்வாயில் தடுப்பு கம்பி இல்லை. இதனால் இப்பகுதியில் பயணிக்கும் மாணவ மாணவிகளும் பெண்களும் கடவுளே துணை என்ற ரீதியில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே அகலம் குறைவான ரோட்டில் எதிரும் புதிருமாக இரண்டு வாகனங்கள் வரும் போது சாலையில் நடந்து செல்வது அபாயகரமானது. இந்த ஓடையில் பலமுறை பைக் மற்றும் ஆட்டோ கவிழ்ந்து பயணிகள் காயம் பட்டு செல்வது வாடிக்கையாக உள்ளது. அதேபோன்று இந்து நாடார் மகமை கமிட்டி திருமண மண்டபம் முதல் கிறிஸ்தவ ஆலயம் வரையுள்ள செண்பகம் கால்வாய் தடுப்புச்சுவர் பலமிழந்து மண் சரிவை ஏற்படுத்தி உள்ளன‌. 

இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது ஆகவே இந்த பகுதி செல்லும் வாகன ஓட்டிகள் குறிப்பாக மாணவ மாணவிகள் பெண்களின் நலன் கருதி நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக கால்வாயில் தடுப்புச்சுவர் இல்லாத பகுதிகளில் தடுப்புசவர் மற்றும் தடுப்பு கம்பி அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் பழனி நாடார், நகர தலைவர் ஜெயபால், நகர செயலாளர் சௌந்தர், பொருளாளர் அண்ணாத்துரை, மாவட்ட துணை தலைவர்  சண்முகவேல் ஊடகப்பிரிவு சிங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory