» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தமிழக – கேரளா போலீசார் ஆலோசனைக் கூட்டம்

திங்கள் 11, பிப்ரவரி 2019 11:25:56 AM (IST)
குற்றாலத்தில் தமிழகம் மற்றும் கேரள மாநில காவல்துறை உயர்அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

குற்றாலத்தில் உள்ள கேரள மாநில பொதுப்பணித்துறை விடுதியில் தமிழகம் மற்றும் கேரள மாநில காவல்துறை உயர்அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்  இருமாநில காவல்துறையினரின் நட்புறவு, இருமாநிலங்களிலும் உள்ள பிரச்சினைகள், விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இருமாநில எல்லை பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை இரு மாநில காவல்துறையினரும் இணைந்து மேற்கொள்ளுவது, தேர்தல் நேரங்களில் பணம் கடத்தல், மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை சட்டவிரோதமாக கொண்டு செல்வதை தடுத்தல், குற்றவாளிகள் தப்பித்து அண்டை மாநிலங்களில் தலைமறைவாக இருத்தல், கேரள மாநிலத்திலிருந்து மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொண்டு வந்து கொட்டுவது, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் சம்பந்தமாகவும், தமிழக கேரள எல்லைகளில் உள்ள புளியரை, ஆரியங்காவு, சோதனை சாவடிகளில் இருமாநில போலீஸாரும் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபடுவது என்றும், போதை பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் சம்பந்தமாக ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் நெல்லை மாவட்ட எஸ்பி.,அருண்சக்திகுமார், கொல்லம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அசோகன், மற்றும் இருமாநில எல்லையோர பகுதிகளில் உள்ள காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory