» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ரயில் படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் தவறிவிழுந்து படுகாயம்

திங்கள் 11, பிப்ரவரி 2019 11:39:54 AM (IST)

செங்கோட்டையிலிருந்து திருநெல்வேலி சென்ற ரயிலில் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்த வாலிபர் தவறிவிழுந்து பலத்த காயங்களுடன் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசம் அருகே உள்ள அனவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் இவரது மகன் முப்புடாதி (19). இவர் செங்கோட்டை அருகே உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முப்புடாதி தனது வேலையை முடித்துவிட்டு செங்கோட்டையிலிருந்து திருநெல்வேலி  செல்லும் ரயிலில் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

அப்போது ரயிலில் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்துள்ளார். அந்த ரயில் செங்கோட்டையிலிருந்து கிளம்பி தென்காசி வரும் வழியில் முப்புடாதி படிக்கட்டிலிருந்து கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்த தென்காசி ரயில்வே போலீஸார் விரைந்து சென்று முப்புடாதியை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இதுசம்பந்தமாக தென்காசி ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd






Tirunelveli Business Directory