» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பழைய குற்றாலம் அருகே இளைஞர் உடல் மீட்பு

திங்கள் 11, பிப்ரவரி 2019 12:37:14 PM (IST)

குற்றாலம் அருகே அடையாளம் தெரியாத இளைஞர் உடல் மீட்கப்பட்டது.

குற்றாலம் அருகே பழையகுற்றாலம் - மத்தளம்பாறை சாலையில் உள்ள அழுதகண்ணீர் ஆற்றில் ஒரு ஆண்பிணம் கிடப்பதாக குற்றாலம் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலறிந்த போலீஸார் விரைந்து சென்று அழுத கண்ணீர் ஆற்றில் பார்வையிட்ட போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண்பிணம் கிடந்துள்ளது. அவர் வெள்ளை நிற சட்டையும், நீல நிற உள்ளாடையும் அணிந்துள்ளார். அவர் இறந்து 3 நாட்களுக்கும் மேல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

போலீஸார்இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எதற்காக இங்கு வந்தார்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரும் கொலை செய்து இங்கு வீசி சென்றார்களா? என்பது குறித்து குற்றாலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory