» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தெற்காசிய அளவிலான வாலிபால் போட்டிகள் : ம.சு, உறுப்புகல்லூரி மாணவர்கள் சாதனை

திங்கள் 11, பிப்ரவரி 2019 1:39:10 PM (IST)
தெற்காசிய அளவிலான வாலிபால் போட்டிகளில் சுந்தரனார் பல்கலைகழக உறுப்புகல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சர்வதேச தெற்காசிய அளவிலான வாலிபால் போட்டிகள் நேபால் நாட்டில் உள்ள காத்மாண்டில் வைத்து 19.1.2019 மற்றும் 20.1.2019 வரை இரண்டு நாட்கள் நடைபெற்றது. 

இந்தோ நேபால் பெடரேஷன் வாலிபால் போட்டியில்  இந்திய அணிக்காக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் சங்கர், இதயன் கிறிஸ்துராஜ், மற்றும் சத்ய சீலன் ஆகிய வீரர்கள் 19 வயதிற்கு உட்பட்ட இந்திய கையுந்து பந்து அணியில் இடம் பிடித்து வெற்றி பெற்று தெற்காசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். 

இப்போட்டியில் வெற்றி பெற்று பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்த்த வீரர்களை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாஸ்கர் மற்றும் பதிவாளர்  சந்தோஷ் பாபு பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள், உறுப்புக்கல்லூரிகளைச் சார்ந்த  உடற்கல்வி  இயக்குநர்கள் மற்றும் பல்கலைக்கழக விளையாட்டு மைய இயக்குநர் துரை ஆகியோர் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory