» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மாவட்டத்தில் இடி தாக்கி விவசாயி பலி

திங்கள் 11, பிப்ரவரி 2019 2:05:20 PM (IST)

நெல்லை மாவட்டத்தில்  மழை பெய்ததில் இடி தாக்கி விவசாயி சம்பவ இடத்திலேயே பலியானார்.

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை பெய்தது. இதில் நாங்குநேரி அருகே உள்ள பார்பரம்மாள்புரம் கிராமத்தில் மழை பெய்தபோது அந்த பகுதியை சேர்ந்த முத்து என்ற விவசாயி காட்டுப்பகுதியில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது மழை பெய்ததால், ஒரு மரத்தின் அடியில் ஒதுங்கி நின்றார். அப்போது அவரை இடி தாக்கியது. 

இதில் முத்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.இடி தாக்கியதில் பரப்பாடி பாரதிநகரை சேர்ந்த முத்து செல்வி , செல்வகுமார் ஆகியோரது வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory