» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருவள்ளுவர் புகழை நிலைநாட்ட வேண்டும் : ‍தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை

திங்கள் 11, பிப்ரவரி 2019 5:35:15 PM (IST)

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் திருவள்ளுவரின் புகழை நிலைநாட்ட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரியில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கடந்த ஐந்து ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தொடங்க உத்தரவிட வேண்டும் என்றும், திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் - காந்தி மண்டபம் இடையே பாலம் கட்ட உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் திருவள்ளுவரின் புகழை நிலைநாட்ட வேண்டும் என்று தெரிவித்து, வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory