» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நுண்ணீர் பாசன நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து : திருநெல்வேலி ஆட்சியர் அறிவிப்பு

திங்கள் 11, பிப்ரவரி 2019 5:51:52 PM (IST)

நுண்ணீர் பாசன திட்டத்தை சரியாக செயல்படுத்தாத இரண்டு நுண்ணீர் பாசன நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தகவல் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையால் 41 நுண்ணீர் பாசன நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் எவர்கிரீன் இரிகேசன் மற்றும் பூர்மா பிளாஸ்ட் பிரைவேட் லிட். ஆகிய இரண்டு நுண்ணீர் பாசன நிறுவனங்களும் நுண்ணீர் பாசனம் அமைப்பதற்கு எவ்வித பணிகளையும் மேற்கொள்ளவில்லை. எனவே அந்நிறுவனங்களுக்கு குறிப்பிடும்படி முன்னேற்றம் காண்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆயினும் அந்நிறுவனங்கள் நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்த எந்த முயற்சியும் எடுக்காத காரணத்தினால் மாநில அளவிலான ஒப்புதல் குழுவின் அனுமதியுடன் அந்நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையால் அளிக்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ள்ளது. எனவே, நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் யாரும் எவர்கிரீன் இரிகேசன் மற்றும் பூர்மா பிளாஸ்ட் பிரைவேட் லிட். ஆகிய நிறுவனங்களை அணுக வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory