» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி மாநகராட்சியில் மறைக்கப்படாத கல்வெட்டு

வியாழன் 14, மார்ச் 2019 12:39:39 PM (IST)




தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள கல்வெட்டு மறைக்கப்படாதது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18 ம் தேதி நடைபெறும் என கடந்த 10 ம் தேதி மாலை அறிவிக்கப்பட்டது. அது முதலே தூத்துக்குடியில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் அழிக்கப்பட்டு வருகின்றன. பல பகுதிகளில் பறக்கும் படையினரின் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. 



பழைய மாநகராட்சி அலுவலகத்திலுள்ள காந்தி , வஉசி சிலைகள் மற்றும் முன்னாள்முதல்வர்கள் காமராஜர், அண்ணாதுரை, எம்ஜிஆர் சிலைகள் மறைக்கப்பட்டுள்ளன. ஆனால் புதிய மாநகராட்சி அலுவலகத்தில் தூத்துக்குடி மாநகராட்சியாக்கப்பட்ட போது அமைக்கப்பட்ட கல்வெட்டு இதுவரை மறைக்கப்படாமல் உள்ளது. 

இந்த கல்வெட்டு மாநகராட்சி ஆணையரின் அறைக்கு அருகிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது. இதை பார்த்த அங்கு வந்த பொதுமக்கள் ஊர் முழுவதும் விளம்பரங்கள், தலைவர்கள் சிலைகளை மறைக்கும் அதிகாரிகள் மாநகராட்சி அலுவலகத்திலேயே உள்ள கல்வெட்டை மறைக்க மறந்தது ஏனோ என கேள்வி எழுப்பினர். மேலும் தேர்தல் முடியும் வரை அதை மறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

வடிவேல் ரசிகன்Mar 15, 2019 - 11:20:03 AM | Posted IP 162.1*****

யோவ் .. கட்டினது கொத்தனார் தான்

தமிழ்ச்செல்வன்Mar 14, 2019 - 06:33:35 PM | Posted IP 162.1*****

தேர்தல் கமிஷனின் இந்த விளையாட்டு கண்ணாடியை திருப்புனா ஆட்டோ ஓடுமாங்குற கதையா இருக்குது. சின்னபுள்ளதனமால்லா இருக்குது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory