» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாவூர்சத்திரத்தில் வாக்குப்பதிவு செயல்முறை விளக்கம்

வெள்ளி 15, மார்ச் 2019 11:27:25 AM (IST)



பாவூர்சத்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு எந்திரம் மூலம் விழிப்புணர்வு செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. 

பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வாக்குப்பதிவை உறுதி செய்யும் வி.வி.பி.ஏ.டி. எந்திரம் மூலம் வாக்குபதிவு குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் பங்கேற்று வாக்குப்பதிவு செய்தனர். இந்நிகழ்ச்சியில் தென்காசி மண்டல துணை தாசில்தார் எழில்ராஜ், தனித்துணை தாசில்தார் ஜெகநாதன், வருவாய் ஆய்வாளர்கள் கனகலட்சுமி, கருணாகரன், இந்திய செஞ்சிலுவை சங்க செயலாளர் சுப்பிரமணியன், கிராம நிர்வாக அதிகாரி திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory