» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மொபட் மீது தனியார் பேருந்து மோதி விபத்து : வியாபாரி பலி

வெள்ளி 15, மார்ச் 2019 12:27:18 PM (IST)

தென்காசி அருகே மொபட் மீது தனியார்பேருந்து மோதியதில் கிழங்கு வியாயாரி பரிதாபமாக இறந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ள கணக்கப்பிள்ளை வலசையைச் சேர்ந்தவர் பட்டமுத்து தேவர் மகன் சுடலையாண்டி (55). கிழங்கு வியாபாரியான இவர் அதிகாலையில் கணக்கப்பிள்ளை வலசையில் இருந்து மொபட்டில் தென்காசிக்கு கிழங்கு கொண்டு சென்றுள்ளார். அவர் தென்காசி-பண்பொழி ரோட்டில் குத்துக்கல்வலசை அருகே சென்ற போது எதிரே தென்காசியில் இருந்து திருமலைக்கோவிலுக்குச் சென்ற தனியார் பேருந்து திடீரென மோதியுள்ளது. 

இந்த விபத்தில் படுகாயமடைந்த சுடலையாண்டி சிறிது நேரத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த பேருந்து தென்காசியில் இருந்து இலஞ்சி, செங்கோட்டை வழியாக திருமலைக்கோவிலுக்குச் சென்று வரும். அதிகாலையில் இலஞ்சி வழியாக செல்வதற்கு பயணிகள் இல்லாததால் தென்காசியில் இருந்து நேரடியாக திருமலைக்கோவிலுக்கு தடம் மாறி சென்ற போது இந்த விபத்து நடந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தென்காசி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார்  வழக்கு பதிவு செய்து சுடலையாண்டியின் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த சுடலையாண்டிக்கு மனைவியும் ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory