» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி, தென்காசியில் போட்டியிடும் திமுக : தொண்டர்கள் உற்சாகம்

வெள்ளி 15, மார்ச் 2019 12:50:51 PM (IST)

நாடாளுமன்ற தேர்தல் 2019 ல் தமிழத்தில் திமுக போட்டியிடும் தொகுதிகளை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.இதில் திருநெல்வேலி மற்றும் தென்காசியில் திமுக போட்டியிடுகிறது.

ஏப்ரல் 18 ம் தேதி தமிழகத்தில் 2019 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என முக்கிய அரசியல் கட்சிகள் வேகம் காட்டி வருகின்றன. இதில் இன்று மதியம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி திருநெல்வேலி, மற்றும் தென்காசி தொகுதியில்  திமுக  போட்டியிடுகிறது. 

இதில் தென்காசி தொகுதியில் நீண்ட இடைவேளையான 29 ஆண்டுகளுக்கு பிறகு திமுக போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தென்காசி பாராளுமன்ற தேர்தலில் திமுக போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ள தகவல் கிடைத்த மறுநிமிடமே திமுக நிர்வாகிகள் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர். தென்காசி தொகுதியில்  திமுக சார்பில் போட்டியிட சுமார் 40 க்கும் மேற்பட்டோர்  விருப்ப மனு கொடுத்துள்ளனர். அவர்களில் ஒருவரை தேர்வு செய்வதில் திமுக தலைமை திவிரம் காட்டிவருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory